அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

சென்னையில் உள்ள மேடவாக்கம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மேடவாக்கம் வட்டார பொது சுகாதார மைய கட்டிடம் அலுவலகம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் உருவாகிறது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 2 கோடியே 99 லட்சம் செல்வில் எட்டு கட்டிடங்கள் உருவாகிறது. 

இந்தக் கட்டிடங்களை தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது :- “ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 கோடியே 99 லட்சம் செலவில் புதிதாக எட்டு கட்டிடங்கள்  திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தில்  2,286 ஆரம்ப சுகாதார நிலையமும், 8,713 துணை சுகாதார நிலையங்களும் உள்ளது. 

இருப்பினும், பல்வேறு இடங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதிய கட்டிடங்களை கட்டாமலும், பயன்பாடு இல்லாமல் இருக்கிற கட்டிடங்களை புது பிக்காமலும் விட்டதன் விளைவாக இன்றைக்கு 8,713 துணை சுகாதார நிலையங்களில் 1,500-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. 

மேலும், 1,000-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்களை கட்டுவதற்கு முடியாத சூழ்நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத கட்டிடங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேடவாக்கத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவரை இந்த வாரத்திற்குள் நியமனம் செய்வோம். ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மருத்துவ பணியிடங்களும் நிரப்பப்படும், ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையாக அரசு மருத்துவ சேவை விளங்கி கொண்டிருக்கிறது” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister m subramaniyan inform medical vacancies fulfill next month last in tamilnadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->