இனி அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசு வேலை - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!
minister m subramaniyan press meet
தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ”பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும்.
கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவத் துறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும்.
வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister m subramaniyan press meet