அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்வது குறைந்துள்ளது - அமைச்சர் மா.சு தகவல்.!
minister m subramaniyan press meet in chennai
அரசு மருத்துவர்கள் அனுமதியில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வது குறைந்துள்ளது - அமைச்சர் மா.சு தகவல்.!
அனுமதியின்றி அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிபோது, "அரசு மருத்துவர்கள் மாநில அரசின் அனுமதியில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.
மாநில அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு தான் அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். தேவையற்ற வகைகளில் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை.
இதனை துறை ரீதியாக பரிசீலித்த பிறகு தான் அனுமதி அளிக்கப்படும். தற்போது அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
minister m subramaniyan press meet in chennai