நோயாளியுடன் இருப்பவருக்கும் பாதிப்பு உறுதி - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.!
minister m subramaniyan speech about kallakurichi issue
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து விசாரித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மது அருந்தி நீண்ட நேரம் ஆனவர்கள் அவர்களது உடலுறுப்பு ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது என்று தெரிவதற்கு முன்னால் கூட மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்தது. புதுச்சேரியை பொறுத்தவரை 8 பேர் ஓரளவு நலமுடனும், 8 பேர் ஆபத்தான நிலையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் நேற்று காலை நோயாளியுடன் உடனிருந்தவருக்கு பாதிப்பு தென்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் கூட 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியிருக்கிறார். அவர் வெளியில் சொல்லாமல் அதற்குரிய பாதிப்பு தென்பட்டவுடன் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 9 பேர் அவசர சிகிச்சை வார்டிலும், 8 பேர் பொது வார்டிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
minister m subramaniyan speech about kallakurichi issue