அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியருக்கு தேநீர் விருந்தளித்த அமைச்சர் சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதை பார்வையிட முடிவு செய்தார். அதன் படி 10 கிராமங்கள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். 

பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும். மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உதவுவதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்று உறுதியளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை. அதிலும் முக்கியமாக சி.டி.ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது. 

உடனே அமைச்சர் சுப்ரமணியன் மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்யுமாறும், இணை இயக்குனர் பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்கும்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister m subramaniyan tea party to govt hospital employees in ramanathapuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->