உலக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் மெஸ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கத்தார் நாட்டில் கால்பந்து உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல நாடுகள் பங்கேற்றன. இந்த வீரர்களுக்கு கேரளா தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கால்பந்து போட்டியை நேரில் பார்ப்பதற்காகா பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் மோதிக்கொண்டனர்.

அப்போது ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. 

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதையடுத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்களை, ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு,க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 
"பிரான்சு அணியின் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். மார்டினசுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும்" என்று பதிவிட்டுளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister mk stalin wisheses to food ball champion messi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->