இனி வீடு தேடி "64 பொருட்கள்" வரும்.. கூட்டுறவுத்துறை அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு.!!
Minister PeriyaKaruppan launched the coop bazaar app
தமிழ்நாடு அரசு சார்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் விதமாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூட்டுறவு சந்தை (CO-OP BAZAAR) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 64 வகை கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து கொள்ளலாம். அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருட்கள் வீடு தேடி டோர் டெலிவரி செய்யப்படும். குறைவான விலையில் மக்கள் பயன்பெறும் விதமாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூட்டுறவு சந்தை செயலியின் சேவையை தொடங்கி வைத்த பின் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மக்களுக்கு தேவையான அளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை புது முயற்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்து விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடி, ரேஷன் கடைகளில் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. பருவ மழையின் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை ஏற்றமடைந்துள்ளது. வெளிச்சந்தையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister PeriyaKaruppan launched the coop bazaar app