சற்றுமுன்: பொன்முடிக்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!   - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி, கடந்த 2006-2011 காலகட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவிவகித்த போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர்மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறை, அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். 

இதில் அமலாக்கத்துறை அப்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில், கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறுபரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, பின்னர் 2022-ல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 லட்சம்கணக்கில் வராத ரொக்கப் பணம்பறிமுதல் செய்யப்பட்டது.

முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டு) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை திசைதிருப்பும் விதமாக, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்ததும், அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடைய ரூ.41.90 கோடிமதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமன் சிகாமணி, முன்னாள் எம்.பி., ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளால், தமிழ்நாடு மாநிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் சுரங்கம் வெட்டிய வழக்கில் ரூ. 14.21 கோடி மதிப்பிலான அசையா மற்றும் அசையும் சொத்துகளை சென்னை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

 

அமைச்சர் பொன்முடியின் சொத்துகுவிப்பு வழக்கு:

கடந்த 2006-2011 காலகட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவிவகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதில், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த தீர்ப்பை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசா லாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் தலா ரூ. 50லட்சம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட, சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறவும் அனுமதி வழங்கியது. இதனையடுத்து அவர் ஜாமினில் இருந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ponmudy ED Case Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->