அமைச்சர் பி.டி.ஆருக்கு மீண்டும் சோதனை.. பழனி முருகன் கோவிலில் 2வது முறையாக தடங்கல்.! - Seithipunal
Seithipunal


திமுகவினர் பெயரளவில் கடவுள் மறுப்பு பேசினாலும் அக்கட்சியில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழக அரசின் மிக முக்கியமான துறையான நிதி துறையின் அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இவர் பல கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரிசனம் செய்ய சென்றபோது அவர் பழனி மலைக்குச் செல்ல ரோப் காரில் பயணம் செய்தார். அப்பொழுது பழனி சுற்றுவட்டார பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கிய படி நின்றது. பின்னர் மின்தடை சரிப்பட்டு பழனி மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றார். இந்த சம்பவம் அப்பொழுது பேசும் பொருளானது. இந்த நிலையில் நேற்று கார் மூலமாக சென்ற அவர் மலைக்கோயிலுக்கு 20 படிக்கட்டுகள் ஏறி சென்று உச்சியை அடைந்தபோது அங்கிருந்த கால்மிதி தடுக்கியதில் கால் தடுமாறி சுதாரித்து நின்றார். பின்னர் சில நிமிடங்கள் நின்றுவிட்டு ஆனந்த விநாயகரை வணங்கினார். பிறகு மூலவரை தரிசிக்கவும் பூஜையில் கலந்து கொள்ள உள்ளே சென்றார்.

கடந்த டிசம்பர் மாதம் பழனி தண்டனை முருகன் கோயிலுக்கு சென்று பிறகு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் ரீதியில் பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. மதுரை திமுகவில் உள்ள உட்க்கட்சி பிரச்சினையின் காரணமாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக நிலவி வருகிறது.

அதேபோன்று சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் வீடியோ விவகாரம் திமுகவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நேற்று திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்தான விளக்கப் பொதுக் கூட்டத்தின் பேச்சாளர் பட்டியலில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக ஆகியுள்ள நிலையில் பழனியில் 2வது முறையாக பி.டி.ஆருக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR foot blocked in palani murugan temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->