செந்தில் பாலாஜியின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த ஜாமீன் - அமைச்சர் ரகுபதி.!
minister ragupathy speech about senthil balaji bail
கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்கள் சந்தித்துப் பேசியுள்ளார். அதாவது:- "செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். செந்தில் பாலாஜியின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன்;
அதனை வரவேற்கிறோம். செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.அமலாக்கத்துறை வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது. ஆனால் எந்த வழக்கிலும் அவர்கள் வெற்றி பெற்றது கிடையாது;
எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்?. வழக்குகளை மட்டும்தான் அமலாக்கத்துறையினர் போடுவார்கள், இறுதி தீர்ப்பு வரை அவர்கள் செல்ல மாட்டார்கள். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவெடிக்கும்.. அதற்கான விவரத்தை முதலமைச்சர் அறிவிப்பார். எங்களுக்கு அதைபற்றி கருத்து கூற இயலாது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
minister ragupathy speech about senthil balaji bail