செயல் திட்டங்கள் நிறைவேற்றியதற்கு காரணம் இவர்தான்..! - அமைச்சர் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


சென்னையில், திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா, தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தீபாவளி சிறப்புகளை வெளியிட்டார். 

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்திருப்பதாவது, ''தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர முடியவில்லை. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என எண்ணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் பல்வேறு செயல் திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். 

இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செயல்திட்டங்களும் விரைவில் முதலமைச்சர் ஆலோசனைப்படி நிறைவேற்றப்படும்'' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister saminathan speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->