புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
Minister Senthilbalaji Case file against Puthiya Thamilakam Krishanasami
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயத்தால் 22 பேர் பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக தமிழக அரசின் டாஸ்மாக் கடையின் அதிகாரப்பூர் டாஸ்மார்க் பாரில் மது அருந்திய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று, தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
அதிலும் குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரத மது விற்பனை மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை கொடுத்தார்.
மேலும், செந்தில் பாலாஜி உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
தன்னை பற்றி சமூகவலைதளங்களில் கிருஷ்ணசாமி அவதூறு கருத்து கூறியதாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
English Summary
Minister Senthilbalaji Case file against Puthiya Thamilakam Krishanasami