ஆய்வில் சிக்கிய 4 அரசு மருத்துவர்கள்..!! மாவட்ட இணை இயக்குனர் ட்ரான்ஸ்பர்..!! அதிர வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீடிர் என ஆய்வு மேற்கொண்டார். இந்த மருத்துவமனையில் மொத்தம் 16 மருத்துவர்கள் உள்ள நிலையில் 4 மருத்துவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. 

அவர்களில் மகப்பேறு மருத்துவர் மெர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபாவடிவுக்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷாபாலாஜி, தொண்டை காது மூக்கு காது சிறப்பு மருத்துவர் கிருத்திகா உள்ளிட்ட 4 மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது. இதனை அடுத்து பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது துறை ரீதியாக 17.பி அரசாணைப்படி ஊக்கத்தொகை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் முறையாக ஆய்வு செய்யாத மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் ரமாமணியை பணி இடமாற்றம் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இதுபோன்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Subramanian ordered to take action against govt doctors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->