நோயாளிகளிடம் செல்போனில் பேசிய அமைச்சர் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்.!
minister subramaniyan visit government hospital
தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்து அங்கிருந்த மருத்துவர்களுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த நோயாளிகளின் பெயர் விவரங்களை குறித்துக்கொண்டு அவர்களை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

மேலும், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த நோயாளிகளையும் தொடர்புகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது?, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது? என்பது குறித்து கேட்டறிந்தார்.
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியபோது அவருடன் மாவட்ட சுகாதார நல அலுவலர் மருத்துவர் பாலுசாமி, புகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், உதவி மருத்துவர் மருத்துவர் இலக்கியா மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வழியாக சென்றபோது அவர் அதிரடியாக புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
minister subramaniyan visit government hospital