குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணமா? - முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


அண்மையில் ஏற்பட்ட மிகஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த மாவட்டங்களில் மீட்புப் பனி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை.

பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது. அவர் எப்பொழுதாவது தான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டது போல் தெரிகிறது என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi press meet in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->