தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக தி.மு.க. இருக்கும் - அமைச்சர் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக தி.மு.க. இருக்கும் - அமைச்சர் உதயநிதி.!

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அதன் படி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது, “ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு படுத்தும் விதமாக மே தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நந்நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் 1923-ம் ஆண்டு முதல் மே தினம் 
கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் என்றால் அது தி.மு.க தான். 

இந்தியாவில் முதன் முறையாக தொழிலாளர்களுக்கு விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, விபத்து காப்பீட்டு திட்டம் என்று அனைத்தையும் கலைஞர் அரசு தந்தது. தமிழகத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். 

அந்த சட்டத்தை மே தின விழாவான இன்று திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக தி.மு.க. எப்போதும் இருக்கும். திமுகவிற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் அழித்து விட முடியாது” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speach may day function in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->