இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக பொறியாளர் அணி சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார். அதாவது:- "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் பாராட்டி பேசினார்.

அவர் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாமல் உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சியை எந்த ஒரு இயக்கமும் இதுவரை நடத்தியதும் இல்லை.

இனி நடத்தப்போவதும் இல்லை. அந்த அளவிற்கு திமுக கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. அதற்கு வாழ்த்துகள். இதற்கு காரணம் நம்முடைய கழகத் தலைவர் முதல்வர், கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, முத்தமிழ் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள் தான் காரணம்.

இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும். நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அதை சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech in chennai kalaivanar mahal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->