இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள் - மாநாட்டின் முடிவில் உருகிய உதயநிதி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- "இந்த மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. இருபத்து இரண்டு தலைப்புகளில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.

திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி.

உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம். இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.
நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை" என்று அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech in dmk youth meeting in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->