ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞரணி சமூகவலைதளப்பாக்கம் - உதயநிதி தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் இன்று தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

"இன்று சமூக வலைத்தளப் பக்கங்கள் தொடங்கி இருக்கிறோம். ஏற்கெனவே, இளைஞர் அணிக்கு என்று ஒரு சமூக வலைத்தளம் இருந்தாலும், இன்று ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் தனியாக, இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், ஃபேஸ்புக் ஆகியவற்றைத் தொடங்கி இருக்கிறோம். 

அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தச் சமூக வலைத்தளப் பக்கங்கள் அன்பகத்தில் இருந்தே இயங்கும். இதற்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்பட்ட பிறகு, அவற்றில் தகவல்களைப் பகிரும் வசதி உங்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும்.

நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எப்படி அரசியல் களத்தில் மக்களைச் சந்திக்கிறோமோ, அந்தக் களம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இன்றைக்கு இந்தச் சமூக வலைத்தளங்களும் மிக மிக முக்கியமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பாஜக வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், நம்முடைய இயக்கத்திற்குத்தான் வரலாறும் சாதனைகளும் இருக்கின்றன. அவற்றை நாம் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin start dmk youths social medias


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->