பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர் எ.வ வேலு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையாக சாலை பணியாளர்களுக்கு கருவி, தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் இறந்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனையினை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் சாலை பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "சாலை பணியாளர்களுக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பான எந்த விதியும் நடைமுறையில் இல்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாலை பணியாளர்கள், பணிக்கு திரும்பவில்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister warns that if road workers not return to work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->