அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு.. "ஜாக்டோ-ஜியோ" நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை..!! - Seithipunal
Seithipunal


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்த இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் தமிழக அமைச்சர்கள் பேச்சு வார்த்தை..!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு இன்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு, தொழில்துறை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அரசுத்துறை செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு உயிர் மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு போன்ற முக்கிய கோரிக்கைகள் இருந்து வருகிறது. ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் நடைபெறுமா அல்லது அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா என்பது தெரியவரும்.

தமிழக அரசு பொருத்தவரை அரசு ஊழியர்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என கருதுவதால் இந்த பேச்சுவார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் நிதிநிலை சிக்கலாக உள்ளதால் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து அரசு ஊழியர் சங்கங்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பேச்சுவார்த்தையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ministers hold talks with Jacto geo Organisations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->