மிக்ஸரை திருடி திண்பவர்களை கண்டு பிடிப்பதற்காக எலி மருந்து கலப்பு! திருடி தின்ற மாணவிகள் மயக்கம்!
Mixture of rat poison to catch those who steal and eat the mixer The students who stole and ate fainted
ஆரணியில் மாணவி ஒருவர் மிக்சரில் எலி மருந்து கலந்து பள்ளிக்கு கொண்டு வந்த நிலையில், அந்த மிக்சரை சாப்பிட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தினந்தோறும் பையில் சாப்பிடுவதற்காக மிச்சர் எடுத்து வருவது வழக்கம். தினந்தோறும் மாணவி எடுத்துவரும் மிச்சரை சகமாணவர்கள் சிலர் திருடு தின்று வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்தது மாணவி யார் திருடி தின்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக வழக்கம் போல் பள்ளிக்கு வரும் போது மிச்சரைக் கொண்டு வந்த மாணவி அந்த மிக்சரில் எலி மருந்தை கலந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தெரியாத சகமாணவிகள் வழக்கம் போல் அவர் பையில் இருந்து மிச்சரை எடுத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அந்த மாணவி யார் எனது மிச்சரை எடுத்து தின்றது என்று கண்டுபிடிப்பதற்காக நான் எலி மருந்து கலந்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளது கண்டு அந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த மாணவி கொண்டு வந்து மிச்சரை சாப்பிட்ட சக மாணவிகள் எட்டு பேர் சிறிதுநேரத்தில் மயக்கமடைந்தது கீழே விழுந்துள்ளார். பின்னர் மாணவிகளை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Mixture of rat poison to catch those who steal and eat the mixer The students who stole and ate fainted