தீவிரம் காட்டும் கொரோனா.. முதல்வர் வெளியிடப் போகும் முக்கிய அறிவிப்புகள்.!  - Seithipunal
Seithipunal


முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். 

பேருந்து நிலையம், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகப்படியாக கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே, சைனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுவதை குறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் அனைத்து இடங்களிலும் மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்ட முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin Conference in Head Office of Chennai 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->