கேரள முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மாநில அரசு நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரளாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலை இடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும். 

நாளை மறுநாள் டெல்லியில் கேரளா அமைச்சரவை நடத்த உள்ள போராட்டத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் என தெரிவித்துக் கொள்கிறேன். 

தெற்கில் பினராய் விஜயனும் கிழக்கில் மம்தா பானர்ஜியின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதியான பற்றுதலைக்  கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுக்கு குரல்கள் தான் வேறு தவிர கொள்கை ஒன்றுதான். 

கூட்டுறவு கூட்டாட்சியை நிலைநாட்டி மாநில சுயட்சியை வென்றெடுக்கும் வரை நமது குரல் ஓயாது. நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin letter to Kerala Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->