ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் - ஸ்டாலின் உறுதி.!
mk stalin press meet in coimbatore
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "நேற்று ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகத்தோடு பணியாற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 என்ற இலக்கை வைத்திருக்கிறோம். ஆனால் ஈரோட்டில் மேற்கொண்ட கள ஆய்வில் நான் உணர்ந்த உணர்வு என்னவென்றால் 200-ஐ தாண்டி விடும் என்று தோன்றுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்.
ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து காங்கிரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஒரு கொடுமையான முடிவு; அது ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளக்கூடியது. ரால்குல் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார் என்றுத் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? என்றுக் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர் "நடிகர்கள் அரசியல் வருகையை நல்லா பார்க்கிறேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
English Summary
mk stalin press meet in coimbatore