அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் - முக ஸ்டாலின் பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு இந்தியாவின் பழைய பெயரான 'பாரத்' என்று மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
 
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்" என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN SAY ABOUT India AND BHARAT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->