கருணாநிதியின் கனவு.! தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்க்க ரூ.3 கோடி நிதி.!! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான முயற்சிகளை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டார்.

அவருடைய நூற்றாண்டு தற்பொழுது தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் சட்ட ஆட்சி மொழியாக கருணாநிதியின் கனவை நினைவாக்கும் வகையில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் வழியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக ரூ. 3 கோடி பின்னர் தேவைக்கேற்ப நிதியும் ஒதுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை 1968 ஜனவரி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாநில ஒன்றிய சட்டங்கள் மற்றும் அறிக்கைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை தமிழக அரசின் சட்டத்துறை செய்து வருகிறது. தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் நோக்கத்தோடு இனி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படும்" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin allocate Rs3crore to publish MadrasHC judgments in Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->