மிதமான மழை பெய்ய வாய்ப்பா!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகம்.....
Moderate rain likely in Tamil Nadu in the next three hours
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குக் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழைப் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதில் திருவாரூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Moderate rain likely in Tamil Nadu in the next three hours