மத்திய அமைச்சராக தமிழக புள்ளி! அண்ணாமலை நிலை என்ன? உறுதிப்படுத்திய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இதில் 55க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மட்டுமே தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதன்படி, இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பங்கேற்கவில்லை.

இதன் மூலம் மத்திய அமைச்சராக போவதில்லை என்பதும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வரை அவர் பாஜக மாநில தலைவராக நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

அதே சமயத்தில் பிரதமரின் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மூலம், எல்.முருகன் மீண்டும் மத்திய அமைச்சராவது உறுதி ஆகியுள்ளது.

இதேபோல், பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளதன் மூலம் மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், கர்நாடக மாநிலம் ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான ஸ்மிருதி இராணி, அனுராக் தாகூர் இருவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Cabinet BJP Annamalai PM Modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->