சேலம் || அமைச்சர் பேரில் வசூல் வேட்டை! லட்ச கணக்கில் இழந்த பார் உரிமையாளர்கள் குமுறல்!
Money fraud obtaining bar permission barname of DMK minister
முன்னாள் பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் மண்டல் அலுவலகத்தில் அமைச்சர் பெயரில் பார் நடத்த பண மோசம் செய்து ஏமாற்றியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
தமிழக தமிழக முழுவதும் சட்டவிரோத டாஸ்மாக் பார்க் இயங்கி வருவதாக புகார் எழுந்தது அடுத்து பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 17 பார்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த டாஸ்மாக் அவர்கள் வெறிச்சோடி காணப்பட்டு வரும் நிலையில் அந்த பார்களை நடத்துவதற்காக பல லட்சம் ரூபாய்களை வாரி இறைத்துள்ளதாக முன்னாள் பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் பார் உரிமையாளர்களில் ஒருவரான தனசேகரன் என்பவர் ஓமலூர் திமுக ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் பார் வைத்து நடத்தி வந்த இவரிடம் அரசிடம் இருந்து அனுமதி வாங்கித் தருவதாக கூறி சென்னையைச் சேர்ந்த அருள் பாஸ்கர் என்பவர் தலைமையிலான ஒரு கும்பல் தனசேகரிடம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை பாரு எந்தவித அனுமதியும் வாங்கி கொடுக்கவில்லை. நாங்கள் அமைச்சருடன் நேரடி தொடர்பில் இருப்பதால் அனுமதி இல்லாமலேயே பாரை நடத்திக் கொள்ளுங்கள் என அந்த கும்பல் உறுதிமொழி கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த அருண், செவ்வாப்பேட்டையை சேர்ந்த சௌந்தர்ராஜ், சேலத்தை சேர்ந்த சௌந்தர், சிவகுமார், ஓமலூரை சேர்ந்த ஜெயக்குமார், ராஜீவ் காந்தி என 6 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை நம்பி பார் திறந்த தனசேகரனின் வியாபாரம் சூடு பிடிக்க தினமும் பல்லாயிரம் கணக்கில் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் தமிழக அரசின் நடவடிக்கையில் சிக்கிய அவருடைய பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் தனது பணத்தை திருப்பித் தரும்படி தனசேகர் பலமுறை கேட்டும் பணம் திரும்ப கொடுக்கவில்லை. இதுபோன்று அனுமதி இல்லாமல் பார் நடத்துவதற்கு சேலத்தில் மட்டும் 17 பார் உரிமையாளர்களிடம் பணம் வசூல் அந்த கும்பல் செய்துள்ளது.
கடந்த ஒரு வருடங்களாக பணம் வசூலில் ஈடுபட்டு வந்த அந்த கும்பலிடம் பணத்தை திருப்பி கேட்டதால் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முன்னாள் பார் உரிமையாளர்கள் சேலம் மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பிறகு இதுபோன்ற எத்தனை பார் உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் முழுமையாக வெளிவரும்.
English Summary
Money fraud obtaining bar permission barname of DMK minister