முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது! வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் ஓட்டுநர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோவை : ஒண்டிப்புதூர் பட்டிணத்தை சேர்ந்தவர் சுதாகரன். கடந்த 2018 ஆம் ஆண்டு, சேலம் மணியனூரை சேர்ந்த தேன்மொழி என்பவரிடம் இவர்  அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார்.

இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி மேலும் 10 பேரிடம் , சுமார் 37 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியுள்ளார்.

மேலும், அரசு அலுவலகங்களில் பணிபுரிவதற்கான போலி பணி நியமன ஆணையையும் தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கொடுத்து  சுதாகரன் ஏமாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தேன்மொழி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்துசுத்தக்காரனை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அவரின் மனைவி பிரபாவதியை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றது உறுதியானது. கைது செய்யப்பட்டுள்ள சுதாகரன் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்பி.வேலுமணியிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Money laundering sudhkaran arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->