குரங்கு அம்மை பாதிப்பு : விமான நிலையங்களில் அதிரடி சோதனை.!
monkey pox issue tn
குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவி வருகிறது.
காய்ச்சல், கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், தொடர் காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய வேண்டும் என்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
* வெளிநாட்டு பயணிகளிடம் குரங்கு அம்மை அறிகுறி ஏதேனும் இருந்தால் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும்.
* காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல்சோர்வு உள்ளிட்டவை இருக்கும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். அவற்றை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.