நிதி நெருக்கடியில் சிக்கி கொண்ட அடகு கடை முதலாளி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கடன்பிரச்சனையால் அடகுகடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு திருமணமாகி உமா மகேஷ்வரி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். ஐயப்பன் அந்த பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ஐயப்பனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் தொல்லையாலும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள வனபகுதிக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mortgage shop owner commits suicide due to debt problem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->