#தஞ்சை || வறுமையின் கொடுமை! வீட்டில் பிறந்த குழந்தையை கொன்ற தாயும் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டில் பிரசவம் பார்த்த தம்பதிகள் பிறந்த ஆண் குழந்தையை கொன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தாயும் உயிரிழப்பு!

பட்டுக்கோட்டையில் செந்தில்-வசந்தி தம்பதியினருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில் 6வது முறையாக வசந்தி கர்ப்பமாகியுள்ளார். இவர்களின் குடும்பம் கடும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில் வசந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளதால் 6வது குழந்தை பிறந்ததும் கொன்று விட வேண்டும் என்ற நோக்கத்தோடு வீட்டிலேயே கணவனும் மனைவியும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கணவன் மனைவியும் சேர்ந்து துணியால் இறுக்கி ஆண் குழந்தையை கொலை செய்துள்ளனர். 

மேலும் பிரசவத்தின் போது அவருக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வீட்டில் மூடிய நிலையில் இருந்த வளியில் கழுத்தில் துணி சுத்தப்பட்டு இறந்து கிடந்த குழந்தையின் உடலையும், தாய் வசந்தியின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் ரத்தப் போக்கால் உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and baby dies after giving birth to herself in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->