குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை... கன்னியாகுமரியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அடித்துக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டு பகுதியை சேர்ந்தவர் விஜி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜியின் கணவர் ஜெபர்சன் கேரளாவில் வேலை செய்து வருவதால் விடுமுறையில் மட்டும் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனால் விஜி தனது குழந்தைகளுடன் தாய் மற்றும் மாமியாரோடு ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை இருவரும் வெளியே அனுப்பிய விஜி தண்ணீர் தொட்டியில் அமுக்கி குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த அவரது தாய் இவர்களை கண்டு சத்தம் போட்டுள்ளார் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother commits suicide by killing children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->