திருவள்ளூர் | தாயின் கண்முன் இறந்த குழந்தை! சோகத்தில் குடும்பத்தினர்!
mother eyes pitiful child dies
மாதவரம் அருகே மூன்றாவது மடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: மாதவரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கட்டிடத்தின் 3-வது மாடியின், மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி பூஜா. இருவருக்கும் பருண், சியோன் (வயது2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளனர். பூஜா நேற்று மதியம் வீட்டின் மாடியில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார்.
அவரது அருகே குழந்தைகள் பருண், சியோன் இருவரும் மடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 2-வது குழந்தை மொட்டை மாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளி வழியாக நுழைந்ததில், குழந்தை சியோன் 3-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்து விட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பூஜா கீழே இறங்கி பார்த்தபோது, 3-வது மாடியில் இருந்து விழுந்ததில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
உடனே பூஜா, குழந்தை சியோனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mother eyes pitiful child dies