திருப்பூர் : உடுமலை அருகே பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் : உடுமலை அருகே பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த தீபாலபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் வசந்தி என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வசந்தி கடந்த 2018-ம் ஆண்டு கர்ப்பமானார்.

இதையடுத்து வசந்தியின் பெற்றோர் அவரை அழைத்துச்சென்று சசிக்குமாருக்கு தெரியாமல் கருவை கலைத்து விட்டனர். இது தொடர்பாக சசிக்குமாருக்கும் வசந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் வசந்திக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவருக்கும் வசந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை விட்டும் வசந்தி பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் வசந்தி மீண்டும் தன் முதல் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து கடந்த மாதம் 3-ந்தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கிடையே சசிக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சசிக்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த வசந்தி திடீரென குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப் போட்டு விட்டு கை தவறி விழுந்து விட்டது என்று கணவரிடம் பொய் சொல்லியுள்ளார். இதைக்கேட்ட கணவர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் போலீசார் வசந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother kill baby in tirupur udumalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->