திண்டுக்கல்லில் பரபரப்பு : தகாத உறவில் உருவான 5 மாத சிசுவைக் கொன்ற தாய்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் பரபரப்பு : தகாத உறவில் உருவான 5 மாத சிசுவைக் கொன்ற தாய்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் வனிதா. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அனீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அனீஷ் சில ஆண்டுகளுக்கு முன் வனிதாவின் உறவுக்கார பெண் ஒருவருடன் மாயமானார். இதனால், வனிதா தனது மகனுடன் கூலி வேலை செய்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில், வனிதாவுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமானார். இதனால் வனிதா தேவையில்லாத பழிச்சொல்லுக்கு அஞ்சி தனது வயிற்றில் உருவான சிசுவை அழிக்க முடிவு செய்து அதற்கான மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

இதில் ஐந்து மாத சிசு வெளியான நிலையில் அதனை வனிதா தனது வீட்டு அருகிலேயே புதைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வட்டாட்சியர் முன்னிலையில் சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி சிசுவின் உடலை எடுத்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother kill five month baby in dindukal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->