திருவள்ளூரில் பரபரப்பு : கள்ளக்காதலில் பிறந்த குழந்தை - தாய் செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் பரபரப்பு : கள்ளக்காதலில் பிறந்த குழந்தை - தாய் செய்த கொடூரச் செயல்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் சுடுகாடு அருகே காலி இடம் ஒன்று உள்ளது. அந்தக் காலி இடத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்துள்ளனர். 

அப்போது அந்தப் பள்ளத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் போடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்தக் குழந்தை இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிர படித்தியதில், அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்ததும் அதனை பள்ளத்தில் வீசி சென்று இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.. 

அதாவது, "கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அதனை தரை பள்ளத்தில் வீசி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother tried kill to child in tiruvallur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->