கல்குவாரி நீரில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு.. பல்லடம் அருகே சோகம்!
Mother, two daughters drown in quarry Tragedy near Palladam
கல்குவாரியில் துணி துவைப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்த சம்பவம் பல்லடம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வேலம்பாளையத்தில் செயல்படாத கல்குவாரி ஒன்று உள்ளது.இந்த கல்குவாரி துணி துவைப்பதற்காக சென்ற தாய் மற்றும் 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother, two daughters drown in quarry Tragedy near Palladam