குடும்பத் தகராறு: மகனுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய் பலி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக மகனுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (65). இவரது மகன் தேவராஜ் (24). இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று வீட்டில் மயங்கி கிடந்து உள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேவராஜ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குடும்பப் தகராறு காரணமாக தேவராஜை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டதால் மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் தற்கொலை செய்து கொள்வதற்காக தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother who drank poison along with her son died in namakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->