பரபரப்புக்கு மத்தியில் மதிமுக நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைத் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் விசிக, மநீம உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதன் படி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து மதிமுகவுடன் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், மதிமுக சார்பில் இன்று ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

அதாவது இன்று காலை பத்து மணிக்கு சென்னையில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk executive meeting in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->