ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பேரணி நடத்த தகுதி இல்லை - மதிமுக வைகோ பேட்டி..!  - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ உள்ளிட்ட இயக்கங்களுக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, பி.எப்.ஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தையும், அவ்வமைப்பின் சமூக வலைதள பக்கத்தையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''ஓரிரண்டு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் பி.எப்.ஐ அமைப்பு மக்களுக்கான பொதுவான பணிகளை தான் செய்துவந்தார்கள். மழைக் காலங்களில் ஆங்காங்கே சென்று சமூகசேவைதான் செய்து கொண்டிருந்தார்கள். 

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவை சேர்ந்தவர்கள் சமூக சேவை தான் செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்ந்த வன்முறை  சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். காவல்துறை நடவடிக்கை எடுத்தது அவர்கள் செய்ய வேண்டிய கடமை தான். 

அதேசமயத்தில், மத வெறியை உண்டு செய்வதை போல் சனாதன சக்திகளும் தமிழ்நாட்டில் ஊடுருவி, சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வேலையில் ஈடுபடுவதையும் நான் கண்டிக்கிறேன்.

எல்லா காலத்திலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில், இப்போது சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கும் ஸ்டாலின் மிகச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாமல் போய்விட்டது. 

ஜிஎஸ்டி விவகாரத்தில், மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அது விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம். காந்தி பிறந்தநாள் அன்று பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்பது என்னுடைய கருத்து'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk leader vaiko press meet for pfi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->