ஆளுநரைப் போன்ற ஒரு உளறல் பேர்வழியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை - வைகோ பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, ''ஆளுநரைப் போன்ற ஒரு உளறல் பேர்வழியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. எப்போ பார்த்தாலும் உளறிக் கொண்டே இருக்கிறார். 

சனாதன தர்மம்தான் இந்த நாட்டினுடைய இலக்கியம் என்கிறார். திருக்குறளை குறிப்பிடுகிறார். அவர் முழுக்க முழுக்க ஒரு சனாதனவாதியாகவும், இந்துத்துவா பிரச்சாரகராகவே மாறிவிட்டார். ஒரு இந்துத்துவா பிரச்சாரகரைத்தான் தமிழகத்தின் ஆளுநராக இங்கே போட்டு வைத்திருக்கிறார்கள். அவருடைய உளறலுக்கு கணக்கே இல்லாமல் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அப்பொழுது திடீரென செய்தியாளர் ஒருவர் “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்பு இப்படி ஒரு சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சிகளாக நீங்கள் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இது நிகழ்ந்திருந்தால் நிறைய பேசியிருப்பீர்கள் என்று சொல்கிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று  கேள்வி எழுப்பிஎதற்கு, அதற்குப் பதிலளித்த அவர், “உடனே கடமையைச் செய்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக கண்டுபிடித்து அதற்கான உரிய நடவடிக்கை அரசு எடுத்திருக்கின்றது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk leader vaiko press meet in madurai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->