நவீன வசதிகளுடன் முடிச்சூர் பேருந்து நிலையம்!...எப்போது திறப்பு?...அமைச்சர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம், இந்த மாதத்தின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளின் வசதிக்காக  5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது குறித்து கட்டுமானப் பணிகளை அவ்வப்போது அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும்,  இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ஓட்டுநர்கள் மற்றும்  நடந்துனர்கள் தங்குவதற்காக அறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், முடிச்சூர் பேருந்து நிலைய திறப்பிற்கு பின்னர்  கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mudichur bus station with modern facilities when will it open minister action announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->