மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் மூன்று பேர் கைது - போலீசார் தரப்பில் விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை மைலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த மயிலாப்பூர் ஹிந்து பெர்மனெண்ட் பன்ட் நிதி என்ற நிறுவனம் நிதி மோசடி செய்ததாக பிரசாத் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில், மயிலாப்பூர் ஹிந்து பெர்மனெண்ட் பன்ட் நிதி என்ற நிறுவனம் (A1) மற்றும் நிர்வாக இயக்குனர்களான (A2) தேவநாதன் யாதவ், (A.3) குனசீலன், (A4) சாலமன் மோகன்தாஸ், (A5) மகிமைநாதன் என்பவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிய பிரசாத், கடந்த 2021 முதல் 2024 வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் நிறுவனத்தின் உள்ள பல்வேறு திட்டங்களான Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes போன்றவற்றில் ரூ. 46,49,180 முதலீடு செய்து உள்ளார்.

ஆனால், இந்த பணத்தினை திருப்பித்தரவில்லை என்ற காரணத்தால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் கடந்த 1872 ஆண்டு முதல் இயங்கிவருகிறது. அதில் (A2) தேவநாதன் யாதவ் என்பவர் 2017 ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குனராக நிர்வாகித்து வருகிறார்.

மனுதாரர் கொடுத்த புகாரில் நிறுவனம் பல கவர்ச்சிகரமான திட்டங்களில் Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes மற்றும் ஓய்வுதிய திட்டம் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பான திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை வட்டி தருவதாக கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண முதலீட்டு தொகை முதிர்வு பெற்ற பிறகும் பணத்தினை திரும்பதரவில்லை. 

மேற்கண்ட நிறுவனம் 144 முதலீட்டாளர்களிடம் ரூபாய் 24.5 கோடி பணத்தை பெற்று ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 14/2024u/s. 409, 420 r/w 34 IPC, Sec. 22 of BUDS Act, 2019 and Sec. 5 of TNPID Act, 1997 என்ற பிரிவுகளின் கீழ் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited, அதன் நிர்வாக இயக்குநர், மற்றும் 4 இயக்கநர்களுக்கு எதிராக கடந்த 12.08.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உரிய புலன் விசாரனைக்குப் பிறகு காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கைய்யா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நேற்று நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் (WIN TV Chairman) என்பவரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், இயக்குநர்கள் குனசீலன் (Win TV Reporter), மகிமைநாதன் (Win TV Senior Camera Man ) என்பவர்களை சென்னையிலும் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mylapore Hindu Permanent Fund Nidhi Limited SCAM CASE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->