என்ன காப்பாத்துங்க சார்! கத்தி கதறிய பெண்! ரூம்க்குள் நடந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து காக்க காத்திருந்த மைசூர் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்திற்கு இளம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு நான் மைசூரில் சேர்ந்தவர் என்னை கடத்தி வைத்துள்ளார்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து நடத்திய விசாரணையில் அவர் மடிப்பாக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக அங்கு விரைந்த போலீசார் மடிப்பகத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம் பெண்ணை மீட்டனர். அந்த வீட்டில் இருந்த சகிலா மற்றும் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அந்த பெண் தெரிவித்ததாவது, சமூக வலைதளம் மூலம் பழக்கமான ஆவடியை சேர்ந்த நண்பரை பார்க்க  சென்னை வந்துவிட்டு மீண்டும் மைசூர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, ஆட்டோவில் வந்த சதீஷ்குமார் ஆசை வார்த்தை கூறி என்னை ஆட்டோவில் கடத்தி சென்று படிப்பக்கத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பின்னர் எனது வாயில் மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

கைதான சசிகலா மற்றும் சதீஷ்குமார் இருவரும்  விபச்சார தரகர் என்பது தெரிய வந்தது. எனவே இளம் பெண் கூறுவது உண்மையா? அல்லது இளம்பெண் விருப்பப்பட்டவர்களுடன் சென்று விட்டு போலீசிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க நாடகம் ஆடுகிறாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysore girl was kidnapped and raped while waiting to guard the bus at Koyambedu bus station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->