கோவில் குளத்தில் பிணமாக மிதந்த மாயமான இன்ஜினீயர்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மாயமான இன்ஜினீயர் கோவில் குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் சேர்ந்த பாண்டியன். இவரது மகன் இன்ஜினியர் கலைமணி(21). இவர் கடந்த 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கலைமணியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முத்துக்குமாரசாமி கோவில் பின்புறம் உள்ள குளத்தில் நேற்று காலை ஒருவர் பிணம் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குளத்தில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் காணாமல் போன கலைமணி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கலைமணி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு குளத்தில் தூக்கி வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious engineer who floated dead in the temple pond in Cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->