அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி திருவிக என்பவர் நேற்று முன்தினம் காலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காரில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திச் சென்று தாக்கிய மர்ம நபர்கள் நேற்று முன்தினம் மாலை விடுவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச்செயலாளராக இருக்கும் சிவராஜ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் சிலரால் கத்தி முனையில் காரில் கடத்தப்பட்டார். 

அதிமுக நிர்வாகி சிவராஜ் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி சிவராஜை கடத்திச் சென்ற மர்மகும்பல் ஒரு மணி நேரம் கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிமுக நிர்வாகி சிவராஜிற்கு தலை, முகம், வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி சிவராஜை மர்ம நபர்கள் நேற்று இரவு 9:30 மணி அளவில் கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவராஜை மீட்ட அதிமுக நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கரூரில் அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சிவராஜ் திமுகவை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious persons murderous attack on Karur AIADMK executive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->