#தமிழகம் | பிச்சை எடுப்பவர்களுக்கு ஓய்வறை கட்டிடம் - அடிக்கல் நாட்டிய மேயர்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே யாசகம் எடுக்கும் யாசகர்களுக்காக ஓய்வு அறைகளை கட்டுவதற்கு, இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யாசகம் எடுத்து வாழும் யாசகர்களுக்காக ஓய்வு அறைகள் கட்டப்பட இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே இந்த ஓய்வறை கட்டிடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு  மேற்கொண்ட மகேஷ், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagarkovil vadachery bus stand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->